Kogilavani / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். சமூக ஆர்வலரும், குரும்பசிட்டி பாடசாலையின் முன்னாள் அதிபரும், முன்னாள் யாழ். தினக்குரல் பத்திரிகையின் பொது முகாமையாளருமாகிய ஆசி நடராஜா கடந்த திங்கட்கிழமை காலமாகினார்.
70 வயதான இவர், யாழ் தினக்குரல் பத்திரிகையில்; தொடர்ந்தும் யாழ். சமூகத்தின் இன்றைய நிலை தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவந்துள்ளார்.
'போருக்குப் பின்னர் கருணைப் பாலம்' என்ற தலைப்பில் இவர் சுமார் 80க்கும் மேற்பட்ட பத்தியை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனூடாக இவர் உள்நாட்டில் சுமார் 10 மில்லியன் ரூபாய்களைத் திரட்டி அதனை தர்மஸ்தாபனங்களுக்கு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் காலமாகியுள்ளார். அவரது இறுதி கிரியைகள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளன.
40 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago