Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 23 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தில் வழங்கப்படவுள்ள வீடுகளில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்களுக்கும் கணிசமான வீடுகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உறுதியளித்தார் என நீதி அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்தது.
வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறி வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் உயர்மட்ட குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறி வரும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைவில் உகந்த தீர்வு காணப்படுமெனவும் ஆளுநர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் நீதி அமைச்சரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
யாழ்ப்பாணம் உஸ்மானியா கல்லூரியின் தற்போதைய அவல நிலையையும் அதனை அண்டிய பரச்சான்வெளி மற்றும் பொம்மைவெளி மக்களின் பிரச்சினைகளையும் அமைச்சர் ஹக்கீம் முன்வைத்தபோது அங்கு தாம் இம்மாதம் 28 ஆம் திகதி நேரில் சென்று நிலைமையை அவதானித்து உடனடியாக அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாக ஆளுநர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் 1,000 பாடசாலைகள் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கு தம்மால் விதந்துரைக்கப்பட்ட எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதை இக்குழுவினரிடம் அதிர்ச்சி தெரிவித்த ஆளுநர் அதனை உள்வாங்க ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
எருக்கலம்பிட்டி ஆஸ்பத்திரி, அப்பிரதேச வீதிகள் ஆகியவற்றை மாகாண சபையின் கீழ் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவ்வாறே முசலி பிரதேசத்தில் சிலாவத்துறை ஆஸ்பத்திரிக்கு இன்னுமொரு மருத்துவரை மிக விரைவில் நியமிப்பதாகவும், மேலதிகமாக நோயாளர் விடுதியொன்றை அமைத்து தருவதாகவும் கூறினார்.
ஆசிரியர் நியமனங்கள் பொறுத்தவரை விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றிலும் வர்த்தகத்துறையிலும் பட்டதாரிகளுக்கு அவை வழங்கப்படுமென ஆளுநர் தெரிவித்தார். அப்போது, தகவல் தொழிநுட்பத்தில் தேறியவர்களையும் உள்வாங்குமாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணீர் ஊற்று, நீராவிப்பெட்டி, முள்ளியவளை, ஹிஜ்ரா நகர் போன்ற பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் இன்றி மீள்குடியேறிய மக்கள் இன்னல்படுவதாக அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டிய போது உடனடியாகவே மாவட்டச் செயலாளர் வேதநாயகம் உடன் தொடர்பு கொண்ட ஆளுநர் தாம் அங்கு அடுத்த மாதம் மூன்றாம் திகதி வருகை தந்து நிலைமையை நேரில் கண்டறிய இருப்பதாகவும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மலசலகூட வசதிகள் என்பன பற்றி உரிய தரவுகளையும் ஏனைய விபரங்களையும் அப்பொழுது தயாராக வைத்திருக்குமாறும் கூறினார்.
பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்றபடியால் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் பொழுது கவனம் செலுத்த வேண்டுமென தூதுக்குழுவினர் வேண்டுகோள் விடுத்த போது அடுத்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் குறிப்பிட்ட சபையின் தவிசாளரிடம் அதற்கான வேண்டுகோளை சமர்ப்பிக்கும் படியும் அதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின் போது மீள்குடியேறும் முஸ்லிம்களுக்கான உட்கட்டமைப்பு, வாழ்வாதார வசதிகள், கல்வி, மருத்துவம், காணிப்பிரச்சினை, தொழில் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிபாவா பாருக், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
niyas Thursday, 24 November 2011 04:47 PM
அரைத்த மாவை திரும்ப அரைக்கிறார்கள் சாமி...
Reply : 0 0
Jay Thursday, 24 November 2011 07:45 PM
இவர்களால் எருக்கலம்பிட்டி மக்கள் பெற்ற பிரயோசனம் ஒன்றுமில்லை!
Reply : 0 0
Pottuvilan Friday, 25 November 2011 01:45 AM
இனி பிரயோசனம் பெறுவார்கள் ,
Reply : 0 0
naleem Saturday, 26 November 2011 05:13 PM
இதையும் செய்யாத இவர்கள் இனி எதையும் செய்யமாட்டார்கள்.
மறைந்த மசூரின் இடத்தை இவர்கள் நிரப்புவார்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago