Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 நவம்பர் 25 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 17.05.2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட நபர் யாழ். மேல் நீதிமன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமீன் ரஜனிக்காந் என்பவரே இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் ஆவார்.
இவரிடம் குற்றவாக்குமூலத்தைப் பதிவு செய்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிரிழந்துள்ளமையால் இந்த வழக்கு விசாரணையை முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுவதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த நபர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவரின் வழக்கில் சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago