2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

"யுத்தத்தால் வடமாகாண சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது"

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

'வட மாகாணத்தில் யுத்ததின் காரணமாக சிறுவர்களின் வாழ்வியல் எதிர்காலம் கேள்விக்குறியான ஒரு நிலையில் இருக்கிறது. சிறுவர்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து நாட்டில் நற்பிரஜைகளாக ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது' என்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். நூலகத்தில் நன்நடத்தை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் இன்று திங்கள் கிழமை நடத்தப்பட்ட மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்விதம் குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

'வட மாகாணத்தில் யுத்ததின் காரணமாக சிறுவர்களின் வாழ்வியல் எதிர்காலம் கேள்விக்குறியான ஒரு நிலையில் இருக்கிறது. சிறுவர்களின் வாழ்வியலை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்ததின் பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய பொறுப்பு மிக்கவர்களாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பெற்றோர்களோடு சேர்ந்து சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

வட மாகாணத்தில் 70 சிறுவர் இல்லங்கள் இயங்குகின்றன. அவற்றில் 30 சிறுவர் இல்லங்கள் தரமானதாக இல்லை என்பதால் இவை மூடப்படவுள்ளன. வடமாகாணத்தில் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு அனுமதிக்க முடியாது. அவ்வாறு சிறுவர்கள் மீது வன்முறைகள், துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சணியம் இன்றி சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 29 November 2011 09:02 PM

    புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களே இது உங்கள் கவனத்திற்கு. ஐரோப்பியர்கள் செய்வது போன்று நீங்களும் தத்து எடுத்து சிறுவர்களின் எதிர் காலத்திற்கு ஒளியூட்டலாம்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .