2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை மாணவனை காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகார்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 28 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட இரண்டாம் வருட மாணவனொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அம்மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) என்ற மேற்படி மாணவன் நேற்று இரவு, கைதடியிலுள்ள மாணவர் விடுதியிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திலும் மேற்படி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0

  • j.sanjai Tuesday, 29 November 2011 12:06 AM

    ஐயோ.. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்!!

    Reply : 0       0

    k.raja Tuesday, 29 November 2011 05:50 PM

    today (Tuesday) morning relised this student..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .