Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 29 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வளலாய், இடைக்காடு பிரதேசங்களில் சுமார் 300 குடும்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்தவர்கள் 24 வருடங்களின் பின்னர் மீள்குடியமர்வு செய்யப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
மீளக்குடியமர்ந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்த மக்களுக்கான தேவைகள் குறித்து மாவட்ட செயலகம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மீள்குடியேற்ற நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்.அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார், கோப்பாய் பிரதேச செயலர் வ.பிரதீபன், சர்வமதத் தலைவர்கள், அப்பிரதேச மக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago