2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போருக்கு பின்னரான யாழின் அபிவிருத்தி; அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆராய்வு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 30 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் போர்க் காலத்திற்கு பின்னர் செய்யப்படும் அபிவிருத்திகள் தொடர்பாகவும், இராணுவத்தினரின் முகாம்கள் யாழில் குறைக்கப்படுகிறதா? அல்லது கூட்டப்படுகிறதா? என்பது தொடர்பாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஆராய்ந்ததாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்தார்

யாழ்.மாவட்ட செயலகத்தில் இலங்கைக்கான அமெரிக்க துர்தரக அதிகாரிளுக்கும் யாழ்.அரச அதிபருக்குமிடையில் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பாக யாழ். அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினர் குடும்பத்தினரோடு வந்து யாழில் குடுயேறுகின்றனரா என்பது தொடர்பாக தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் யாழின் தற்போதைய அபிவிருத்தியில் மக்களின் பங்களிப்பு எவ்விதம் இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ந்ததாக' அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். அரச அதிபருடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க துணைத்தூதுவர் கேத்ரீன் வொன்டி மற்றும் வொசின்டன் மாநில அதிகாரி எமிலி பாக்கொடர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .