Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி மேற்கு சங்கானை பிரதேச சபை நேற்று புதன்கிழமை மூன்றாவது தடவையாக கூடிய போதிலும் சுமார் 40 நிமிடத்தில் சபையை ஒத்தி வைத்து விட்டு தலைவர் வெளியேறினார்.
சங்கானை பிரதேச சபையின் தலைவர் நாகரஞ்சினி ஜங்கரன் தலைமையில் சபை நேற்று பகல் கூடியது. இதன்போது, கடந்த கூட்டத்தில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக சபையின் கடந்த கால கணக்கறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என சபையின் உப தலைவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சபையின் நடவடிக்கைகளை தாமதமடைந்து கணக்கறிக்கை பெறப்பட்டது.
தொடர்ந்து சபை கூடியதும் உறுப்பினர்களுக்கு தெரியாமலும் தனது எதிர்கால நன்மை கருதியும் தலைவர் சில செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் இதனை தமக்கும் தெரிவிக்க வேண்டும் என சபையின் உப தலைவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலில் தலைவர் தனது நெருங்கிய ஒருவரை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இத்தகைய செயல்பாடுகளை மறைமுகமாக அடுத்த உறுப்பினர்களுக்கு தெரியாமல் மேற்கொள்வதாகவும் இத்தகைய செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை தலைவர் ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் சபையின் நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக கூறி சபையில் இருந்து வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து சபையை உப தலைவர் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளும் தரப்பை சேர்ந்த சிலரும் கொண்டுவந்தனர்.
எனினும், அதனை கருத்தில் கொள்ளாது சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகினறது.
இதேவேளை இன்று வியாழக்கிழமை வரவு செலவுத்தி;ட்டம் அங்கீகரித்தல் சம்பந்தமான விசேட கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago