2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வடக்கில் ஆறு கல்வி வலயங்களுக்கு கல்விப் பணிப்பாளர்கள் நியமனம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட ஆறு கல்வி வலயங்களுக்கான கல்விப் பணிப்பாளர்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சு நியமித்துள்ளது.  இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.செல்வராஜா, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.நந்தகுமார் பதவியுயர்வு பெற்றுள்ளார். அத்துடன் கிளிநொச்சி பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய எஸ்.முருகவேலுக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.வரதராஜமூர்த்தி முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.  முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிய எஸ்.கிருஷ்ணகுமார் வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிச் செயலாளர் ஏ.எம்.சியான், மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரான எஸ்.மாலினி மடு வலயக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்களென வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .