2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் 15 பேர் பகடிவதையில் ஈடுபட்டார்களெனக் கூறி பல்கலைக்கழக நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டமையைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக கலைப்பீட  மாணவர்கள் தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தைச் சேர்ந்த மேற்படி மாணவர்கள் 15 பேரும் கடந்த 17.11.2011 அன்று    பகடிவதையில் ஈடுபட்டார்களெனக் கூறி அடையாளம் காணப்பட்டு அன்றையதினமே பல்கலைக்கழக நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தனர்.

தங்களுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பு போராட்டம் தொடருமென யாழ். கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .