2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் மூன்றம்சக் கோரிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,கவிசுகி)

தங்களுக்கான வேலைவாய்ப்பு நியமனத்தை பெற்றுத்தருமாறு கோரி யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவனிடம் மூன்றம்சக் கோரிக்கை அடங்கிய மகஜரொன்றை இன்று வெள்ளிக்கிழமை கையளித்துள்ளனர்.

யாழ். பெருமாள் கோவில் முன்றலில் ஒன்றுகூடிய யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், அங்கிருந்து  ஊர்வலமாகச் சென்று வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த மகஜரைக் கையளித்துள்ளனர்.

இதன்போது யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினருடன் உரையாடிய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன்,  அரசாங்க சேவைகளில் தகுதிகாண் அடிப்படையில் பட்டதாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை நிச்சயமாக பெற்றுக்கொடுக்க முடியுமென்பதுடன், அரசாங்கத்தின் கொள்கைகளுக்கமைய வடமாகாணத்திலுள்ள வேலைவாய்ப்புக்கள் உள்ளூர் பட்டதாரிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கூறினார்.

தான் வடமாகாண ஆளுநரின் முகவராக செயற்படுவதால் உங்களது மூன்றம்சக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடமாகாண ஆளுநரிடம் கையளிப்பதாகவும் பரிசீலனை செய்து உங்களுக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமெனவும் எஸ்.இளங்கோவன் குறிப்பிட்டார்.  

இதன்போது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவனிடம்  சில பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய யாழ். மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், தங்களது வேலைவாய்ப்புக்களில் எந்தவித அரசியல்த் தலையீடுகள் இல்லாது சுயாதீனமாக இருக்க வேண்டுமெனவும் தெரிவித்தனர். 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .