2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில். தனியார் உழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதிக்கான இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கை

Kogilavani   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ்.மாவட்டத்தில் உள்ள சமுத்தி அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், தனியார் வைத்தியசாலைகள் என்பவற்றில் கடமையாற்றும் ஊழியர்களை ஊழியர் சேமலாப நிதித்திட்டத்தில் இணைத்துக்கொள்ளும் செயல்திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாபநிதிக்கான இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கொழும்பில் இருந்து யாழிற்கு விஜயம்செய்துள்ள குழுவினர் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகச் சென்று பதிவுகளை முன்னெடுத்து வருகின்றனர். யாழ். மாவட்ட தொழில் தினைக்கள் ஆனையளார் கனகசபாபதி கனகேஸ்வரன் நேரடியாக  உரிய அலுவலர்களுடன் சென்று இந்நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றார்.

இதனடிப்படையில், வலிகாமம் பகுதியில் உள்ள ஊழியர்களை பதிவு செய்யும் நடவடிககை நேற்று வெள்ளிக்கிழமை உடுவில் பிரதேச செயலாளர் மாநாட்டு மண்டபத்தில இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .