Kogilavani / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் பதின்மர் பருவ கர்ப்பங்கள், திருமணமாகாமல் குழந்தை பெரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வது யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கூறியுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் பதின்மர் பருவத்தில் 346 பெண்களும் திருமணப் பதிவுகள் எதுவும் செய்யப்படாமல் 114 பெண்களும் கர்ப்பம் தரித்துள்ளனரென குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதேச வாரியாக பதின்மர் வயதுக் கர்ப்பங்கள், திருமணமாகாமல் கர்ப்பம் தரித்தவர்களின் எண்ணிக்கை விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கிரமப்புரங்களில் முறையான பாதுகாப்பு, போதியளவான அறிவின்மையே இதற்கு காரணம் எனவும் உடனடியாக இதுதொடர்பிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
11 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago
avudaiyan Thursday, 08 December 2011 03:33 AM
சட்டவிரோத கருக்கலைப்பும் கர்ப்பத்தின் பின்னான திருமணமும் இதைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும். யாழ்.பெருமை பேசுவதை விட்டுவிட்டு சமுக ஆர்வலர்கள் இதை விவாதித்து இளைஞர்கள் அறிவூட்டப்பட வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
1 hours ago
2 hours ago