Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2008 ஆம் ஆண்டு கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அம்பலாங்கொடையைச் சேர்ந்த நபர் மூன்று வருடங்களின் பின்பு யாழ்.மேல் நீதிமன்றத்தினால் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடையைச் சேர்ந்த தேவராஜ் முரளிராஜா 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிளிநொச்சி பிரதேசத்தில் மறைமுகமான இடம் ஒன்றில் விடுதலைப் புலிகளிடம் மைக்ரோ பிஸ்டல் மற்றும் ஏ.கே 47 ஆயுதங்கள் தொடர்பான ஆயுதப்பயிற்சி பெற்றார் என்ற சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 2008 ஆம் ஆண்டு கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
குறித்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டினை சட்டமா திணைக்களம் யாழ்.மேல் நீதிமன்றில் நடத்தி வந்தது. இந்த வழக்கில் சாட்சியான உதவி பொலிஸ் பரிசோதகர் பல தடைவை யாழ்.மேல் நீதிமன்றால் கட்டளை அனுப்பப்பட்டும்
மன்றிற்கு சமூகமளிக்கவில்லை
இன்று, மேல் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பரமராஜாவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தேவராஜ் முரளிராஜா சார்பாக கண்டி சட்டத்தரணி எஸ்.பத்மலகஷ்மன் ஆஜராகி வாதாடி வந்தார்.
neethan Friday, 09 December 2011 04:03 AM
இவரை போன்று இன்னும் எத்தனை பேர் வழக்குகள் முடியாமல், குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாமல் சிறையில் உள்ளனரோ?
Reply : 0 0
RAMKUMAR Friday, 09 December 2011 05:25 PM
இவ்வளவு காலமும் சட்டவிரோதமாக தடுத்து வைத்ததற்கு அரசு என்ன நஷ்ட ஈடு வழங்க போகிறது. சட்டம் சரியாக செய்யுமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago