2025 மே 17, சனிக்கிழமை

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2011 டிசெம்பர் 09 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

காதலிப்பதாக ஏமாற்றி 15 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய 21 வயது இளைஞனை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து வாக்கு மூலத்தை பதிவுசெய்யுமாறு யாழ். நீதிவான் ஆ.ஆனந்தராஜா பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

உரும்பிராய் வடக்குப் பகுதியைச் சேந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி 1 மாதகாலம் மட்டும் தன்னுடன் வைத்திருந்து விட்டு, அந்தச் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். அதன் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

குறித்த இளைஞனை 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்குமாறும் யாழ். நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .