2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

உயிருடனுள்ள பெண்ணின் பெயரில் இறப்பு சான்றிதழ் பெற்றவரை கைது செய்ய நடவடிக்கை

Super User   / 2011 டிசெம்பர் 12 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

உயிருடன் இருக்கும் பெண்ணொருவர்  இறந்துள்ளதாக தெரிவித்து போலியான மரண அத்தாட்சி பத்திரம் பெற்றவரைக் கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் உயிருடன் இருக்கும் பெண்மணி ஒருவர் யாழில் துப்பாக்கிச் சூட்டில் 1991ஆம் ஆண்டு இறந்துள்ளதாக தெரிவித்து போலியான இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடடார்.

ஒருவரின் சொத்தை அபகரிப்பதற்காக இறப்பு சான்றிதழைப் பெற்று வங்கி ஒன்றில் காணியை ஈடுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்காக குற்ற புலனாய்வு  பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் தனது காணியை மீட்பதற்காக சுவிட்ஸர்லாந்திலிருந்து வந்து தான் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ள காணியை மீட்டு தறுமாறு தன்னிடம் வந்து கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர்கள் இறந்துள்ளதாக அவர்களது உறவினர்களால் போலியான இறப்புச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X