Menaka Mookandi / 2012 ஜனவரி 02 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றை விற்பனை செய்துவந்த கொள்ளைக் கும்பலொன்றை யாழ். இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களால் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 10 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
ஐவர் அடங்கிய மேற்படி கொள்ளைக் கும்பலுடன் திருட்டு சைக்கிள்களை கொள்வனவு செய்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.முனசிங்க - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
பொருட் கொள்வனவு உட்பட பலதரப்பட்ட தேவைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள், அவற்றை வீதிகளுக்கு அருகில் நிறுத்திச் செல்லும் வேளையிலேயே கொள்ளையர்களால் அவை களவாடப்படுகின்றன.
இக்கொள்ளையர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசேட தேடுதல் நடத்தப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் ஐவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் ஐ.பி.முனசிங்க குறிப்பிட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதோடு அவர்களால் திருடப்பட்ட சைக்கிள்களையும் நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago