2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்

Kogilavani   / 2012 ஜனவரி 06 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது இரு மோட்டார் சைக்கிளகள் திடீரென வெடித்துச் சிதறியதால் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பயனளிக்காது யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவரான  கைதடி நாவற்குழியைச் சேர்ந்த 62 வயதுடைய கந்தையா மனோகரன் என்பவரே இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X