2025 மே 17, சனிக்கிழமை

யாழ்ப்பாணம் புதிய பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டல்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 12 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் தலைமையக புதிய பொலிஸ் நிலையக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாலை 6.23க்கு மேற்படி கட்டிடத் தொகுதிக்கான தளத்தை வெட்டியதுடன் 6.44க்கு அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.

வடபகுதிக்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா, கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நீல் தளுவத்த, 512ஆவது படையணியின் கட்டளைத் தளபதி அஜித் பல்லேவல, யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரால் அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.

1927ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டுள்ள யாழ் பொலிஸ் நிலையம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் செயற்பட்டு வந்த நிலையில் 1984ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

இன்று அடிக்கல் நடப்பட்டுள்ள இப்புதிய கட்டிடத்திற்கு 294 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .