2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகள் கையளிப்பு

Super User   / 2012 ஜனவரி 18 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 117 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வட மாகாண வைத்தியசாலைகளுக்கு இன்று புதன்கிழமை கையளித்தார்.

இதற்கினங்க 88 மில்லின் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் 29 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கும் இந்திய அரசினால் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்காக வைத்தியசாலையின் அதி தீவிர சகிச்சை பிரிவு, மகப்பேற்று பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வுகூடங்களில் பயன்படுத்த கூடிய  அத்தியவசியமான மருத்துவ உபகரணங்களே இந்திய அரசினால் கையளிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்காக பல மில்லியன் ரூபா 10,000 துவிச்சக்கர வண்டிகள் வழங்கல் திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி  துவிச்சக்கர வண்டிகளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால் பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம்உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:கவிசுகி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X