Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வெளிநாடுகளிலும் பார்க்க இலவசக் கல்வியை வழங்குகின்ற நாடுகளில் இலங்கை முன்னுதாரணமாக விளங்கி வருகின்றது என்பதுடன் மாணவர்களை பாடசாலைக் கல்வியோடு இணைந்த ஆரோக்கியமான சமூகமாக வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாக உள்ளது' என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பாடசாலைப் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையான நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தேசிய போஷாக்கு நிகழ்ச்சித் திட்டத்தை வல்வெட்டித்துறையில் தொடக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
எமது நாட்டில் நான்கு மில்லியன் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இல்லாது அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இதனூடாக பாடசாலைக் கல்வியோடு இணைந்த உடல் உள ரீதியில் வளர்ச்சியடைந்த ஆரோக்கியமான சமூகமாக எமது மாணவர்களை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதன் அடிப்படையில்தான் நிதித்துறை, திறைசேரி, யுனிசெப் உள்ளிட்ட ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களின் ஊடாக 2006ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியால் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் 2012ஆம் ஆண்டில் இத்திட்டத்தினூடாக தரம் ஒன்று முதல் தரம் ஒன்பது வரை கல்வி கற்கும் 10 இலட்சம் மாணவர்கள் பயன்பெறவுள்ளனர்.
இந்நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது இங்கு நல்லதொரு எதிர்காலம் உருவாகியுள்ளதுடன் இலவச சீருடை இலவசக் கல்வி மற்றும் போசாக்கு தேசிய நிகழ்ச்சித் திட்டம் என்பவை குறித்து உலகின் பல நாடுகளும் ஆச்சரியம் அடைந்துள்ளன.
இதன் பிரகாரம் இலவசப் பாடப் புத்தகம், சீருடை, உணவு என்பனவற்றுடன் உரிமைகளைப் பாதுகாக்கின்ற நாடாக விளங்குவதுடன், நாடளாவிய ரீதியில் 5000 ஆரம்பப் பாடசாலைகளும் 1000 இடைநிலைப் பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
வடமாகாணத்தில் ஆயிரம் பாடசாலைத் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கல்வியமைச்சு ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியிடம் நிதியை வழங்கியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் வடமாகாணத்தில் சேதமடைந்துள்ள நிலையில் காணப்படும் அனைத்து பாடசாலை மலசலகூடங்களும் புனரமைக்கப்படவுள்ளன.
வடபகுதி மாணவர்கள் தென்பகுதிக்கும் தென்பகுதி மாணவர்கள் வடபகுதிக்கும் சென்றுவருவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை முடிவுகள் தாமதமாவதை சிலர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். யாழ். மாவட்ட மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தமை பாராட்டத்தக்கது.
இந்நிகழ்வில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் பிரேமதிலக்க, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உள்ளிட்ட திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025