Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 22 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கலையொளி கிராமத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே நேற்று சனிக்கிழமை இரவு இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் ஆவார்.
உடனடியாகக் கோப்பாய் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த மாணவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதிலும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதேவேளை, இந்த மாணவியைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற தந்தை வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
A.Mathura Monday, 23 January 2012 10:17 PM
கடவுள் ரொம்ப வாட்டுறாரே, அந்த பிள்ளையின் பெற்றோர் பாவம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025