2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழ். வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கான இயந்திரங்கள் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2012 ஜனவரி 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இயந்திரங்களை கனடா வாழ் தமிழ் மக்கள், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி ஊடாக இன்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவுக்கான இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. கனேடிய மக்களின் இந்த அன்பளிப்பை கனேடிய அரசினூடான அந்த மக்கள் யாழ். மக்களின் மருத்துவ வசதிக்காக இந்த இயந்திரத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 225 மில்லியன் பெறுமதியான இருதய சிகிச்சை பிரிவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • waaqiff Tuesday, 24 January 2012 01:30 PM

    இதுதான் புலம் பெயர் தமிழ் மக்கள் தங்கள் மக்களுக்காக ஆற்ற வேண்டியது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X