2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

விடாமுயற்சி இருந்தால் வெற்றி உன்னை வந்தடையும்: அப்துல் கலாம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 24 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இலட்சியக் கனவு, கடின உழைப்பு, விடாமுயற்சி, ஆகியவற்றின் மூலம் எந்தவொரு மாணவனும் உச்ச நிலையை அடைய முடியும் என இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை 'அறிவியலில் சமூகத்தின் தோற்றம்' என்னும் தொனிப்பொருளில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இலட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு திறமையான ஆசிரியர்கள் வளம், நூல்கள் என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. பறக்க வேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய இலட்சியத்தை ஏற்படுத்த வழிவகுக்கும்.

அந்த இலட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும் பறவாயில்லை. உன்னால் வெற்றியடைய முடியும். உன் உள்ளத்தில் இலட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். இலட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம்.
உழை, உழைத்துக்கொண்டே இரு. விடாமுயற்சி உனக்கு இருந்தால் நீ யாராக இருந்தபோதிலும் வெற்றி உன்னை வந்தடையும்.  

ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப் பெற அதை தேடிச் செல்ல வேண்டும். விடாமுயற்சி வேண்டும். தோல்வி மனப்பான்மையை  தோல்வியடைச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு மெய்ப்படும்' என்றார்.


  Comments - 0

  • ummpa Tuesday, 24 January 2012 05:28 PM

    உங்களைப் போற்றுகின்றோம், நீங்கள் உங்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர இலங்கையர் அதுதான் உங்களை இன்று இந்த நிலைக்கு காரணமும். நீங்கள் சொல்லுகின்ற அனைத்தும் எங்களிடம் அமைந்து இருக்கிறது. அதனை இன்னும் வலுவாக பயன்படுதுவதக்கு எங்களுக்கு உரிமை இல்லாத ஜீவன்கள் அதனால்தான் கொஞ்சம் அரசுக்கு படக்கூடிய மாதிரி மண்டேலா கதை சொல்லியது விளங்குபவர்களுக்கு புரியும். நீங்கள் ஏன் ஒரு நடுநிலை வகித்து இலங்கை மக்களை ஒருநிலைப்படுத்த முடியாதா? அந்த முயட்சிக்கு பலநாடுகள் உங்களின் பக்கம் இருக்கும் நிட்சயம்.

    Reply : 0       0

    kalmunaiyaan Tuesday, 24 January 2012 10:24 PM

    இது முற்றிலும் உண்மை...

    Reply : 0       0

    sam Wednesday, 25 January 2012 06:34 PM

    ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்ந்து அறிவைப் பெற அதை தேடிச் செல்ல வேண்டும். விடாமுயற்சி வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வியடைச் செய்ய வேண்டும்... best quote I ever heard...

    Reply : 0       0

    human Thursday, 26 January 2012 03:10 AM

    ஒவ்வரு இளைஞனுக்கும் மக்களுக்கு உதவும் நல்ல மனம் வேண்டும். அதுக்கு ஒரு தொழிலை தெரிவு செய்ய வேண்டும்.
    அதை அடைய நிறைய ஹோம் வேர்க் செய்ய வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X