2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'புலம்பெயர் தமிழர்கள் யாழ். மக்களின் சுகாதார தேவைகளுக்கு உதவ வேண்டும்'

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழ்ப்பாண மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக உதவிபுரிய வேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார்.

கனேடிய மக்களினால் நேற்று திங்கட்கிழமை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்ட இருதய சிகிச்சைக்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

யாழ்ப்பாண மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உதவி செய்து உங்கள் உறவுகளின் உடல் ஆரோக்கியத்தில் பங்கு எடுக்குமாறும் அவர் கோரினார்.

அதிகளவான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வருவது யாழ். போதனா வைத்தியசாலைக்கே. அந்த வைத்தியசாலையில் கட்டிடப் பிரச்சினைகள் தொடக்கம் உபகரணங்களின் பற்றாக்குறையும் காணப்படுகின்றன எனவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X