Suganthini Ratnam / 2012 ஜனவரி 29 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் தோட்டத்திற்;கு நீர் இறைப்பதற்காகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டார்.
ஏழாலை மேற்கு நாவலடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவராசா மகேந்திரன் (வயது 57) என்பவரே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை தோட்டத்திற்;கு நீர் இறைப்பதற்காக ஏழாலை தோப்பு பகுதியில் உள்ள தோட்டத்திற்கு நீர் இறைக்கும் இயந்திரத்துடன் சென்ற இவர், கிணற்றில் இயந்திரத்தைப் பூட்ட முற்பட்டபோதே கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
மல்லாகம் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
28 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
3 hours ago