2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை எங்களால் கொடுக்க முடியும்: பிரதமர்

Kogilavani   / 2012 பெப்ரவரி 03 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

(கவிசுகி)

'யாழ்.மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை எங்களால் கொடுக்க முடியும.; இந்த மக்களின் அபிவிருத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக பங்குபற்றி வருகிறார்' என பிரதமர் டி.எம். ஜயரட்ண தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஜெட்விங் யாழ்.ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'யாழ்.மக்களின் அபிவிருத்தியில் எங்கள் அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமனான அபிவிருத்த்pயைப் பெற்று வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமான சமாதானம் ஒன்றே ஒரே தெரிவாக இருக்கிறது. மக்களின் எதிர்காலத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் கூடிய அக்கறை எடுத்து செயற்பட்டு வருகின்றோம்' என்றார்.

சுமார் 75 கோடி செலவில் 14 மாடிக்கட்டிடம் 18 மாதங்களில் முடிக்கப்படவுள்ளது

இந்த நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, டக்ளஸ்.தேவானந்தா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மிலிந்த மொரகொட வடமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ்.மாநகர முதல்வர், மற்றும் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .