2025 மே 17, சனிக்கிழமை

'அதிக வெப்பநிலை காரணமாக யாழில் தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம்'

Super User   / 2012 மார்ச் 19 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள அதிக வெப்பநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"யாழில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக தோல் வியாதி மற்றும் கண் நோய் ஆகிய நோய்களுக்கு உள்ளாகி யாழ். வைத்தியசாலைகயளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்ப நிலையின் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்குட்படுவதாகவும் காய்ச்சல்இ வாந்திபேதி மற்றும் வயிற்றோட்டம் போன்ற நீரினால் பரவும் நோய்களின் தாக்கமும் அதிகரித்து உள்ளது.

கண்களில் எரிவு மற்றும் கண்கள் சிவந்து காணப்படுதல் போன்றன காணப்படுமானால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று தகுந்த சிகிச்சை பெற்று கொள்ளுமாறும்" தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .