2025 மே 17, சனிக்கிழமை

வடமாகாணத்தில் காசநோய்த் தாக்கம் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 20 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாணத்தில் காசநோயின் தாக்கம் அதிகரித்துச்  செல்வதாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி சி.யமுனாந்தா தெரிவித்தார்.

உலக காசநோய் தடுப்பு வாரத்தை முன்னிட்டு யாழ். பண்ணை காசநோய் தடுப்பு அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

காசநோய் காரணமாக யாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டில் 345 பேர் சிகிச்சை பெற்றதாகவும் இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 86 பேர் சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

வடமாகாணத்தில் குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காசநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர்கள் யுத்தப் பாதிப்புக்களிலிருந்து விடுபட்டபோதிலும்,  இந்த நோய்த்தாக்கத்திலிருந்து விடுபட முடியாதவர்களாக உள்ளதாகவும்  யாழ். காசநோய் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி சி.யமுனாந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து காசநோய் சிகிச்சைக்காக பலர் தினமும் வருவதாகவும் அவர்களில் பெரும்பாலனோர் யுத்தத்தின்போது கந்தகக் காற்றை சுவாசித்ததினால் இந்நோய்த்தாக்கத்திற்குட்பட்டவர்களாக உள்ளதாக  ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உலக காசநோய் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .