2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இராணுவ சாகச பயிற்சியில் விபத்து, மூன்று இராணுவ வீரர்கள் படுகாயம்

Super User   / 2012 மார்ச் 21 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிக்கான பயிற்சியின்போது வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மூன்று இராணுவ வீரர்கள் யாழ்.போதனா வைத்திய சாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

இன்று புதன்கிழமை மாலை  தினம் இடம்பெற்ற இராணுவ வாகன சாகச நிகழ்வில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தும் போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் எதிர்வரும் 23, 24, 25 ஆகிய தினங்களில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இராணுவ வீரர்களின் சாகச நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது தொடர்பான பயிற்சிகள் இன்று புதன்கிழமை நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .