2025 மே 17, சனிக்கிழமை

கோப்பாய் கிணற்றிலிருந்து சிப்பாயின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி, சுபுன் டயஸ்)

யாழ்.கோப்பாய் பகுதியில் கிணறொன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த சமந்திர கெஷ்டா பிரதீப் ஜெயசேகர என்ற 21 வயது சிப்பாயின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

தற்போது, சடலம் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடமையின் போது கிணற்றில் மீது ஏறி நின்ற இவர் தவறி வீழ்ந்துள்ளதாக பாதுகாப்பு படைகளின் யாழ்.கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .