2025 மே 17, சனிக்கிழமை

'தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான தீர்வு குறித்து கனேடிய அரசு கவனம் செலுத்த வேண்டும்'

Suganthini Ratnam   / 2012 மார்ச் 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                    
                                                                                                (கவிசுகி)

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தீர்வு குறித்து கனேடிய அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் பிரதிநிதிகள்,  கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ். ஆயர் இல்லத்தில் இன்று சனிக்கிழமை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான கிறிஸ்ரி அலைக்சாண்டர், வோன்வைற் ஆகியோருக்கும்  சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே  சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவின் பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

இலங்கை அரசாங்கம்  இறையாண்மை என்ற ஒரு பதத்தை வைத்துக்கொண்டு குறுகிய மனப்பாங்குடன் செயற்பட முடியாது என்பதுடன், சர்வதேசத்தை ஏமாற்றவும்  முடியாது என சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். அது மிக முக்கியமானது. அகதிகளின் நலன்கள்; தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடிய கவனம் செலுத்துவதற்கு கனேடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மீளக்குடியமர்ந்த மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்ந்ததாக இல்லை. சில பிரதேசங்களில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட செய்யப்படாமல் இருக்கிறது என சமாதானத்திற்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழு பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

ஜெனீவாவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவதானிப்புக்களை மேற்கொள்வதற்காக தாங்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாகவும் அரச மற்றும் அரசசார்பற்ற பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாட வந்துள்ளதாகவும்  கனேடிய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இதன்போது கூறினர்.




You May Also Like

  Comments - 0

  • vigtha Saturday, 24 March 2012 09:01 PM

    தேங்க்ஸ் பாதர், உங்களுழைய சேவை தொடர வேண்டும்
    இலங்கையில் உள்ள கூட்டமைப்பு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இலங்கை தமிழ் சிவில் அமைப்புகள் தமிழ் நட்டு தமிழ் அமைப்புகள் எல்லாம் பரந்த ஒன்றுபட்ட அமைப்புகளாக கட்டி எழுப்பப்பட வேண்டும்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 25 March 2012 12:16 AM

    இங்க யாரு யாருடைய சுயத்தை நிர்னயிக்கும் உரிமையை பிடித்து வைத்து இருக்கிறார்கள் எல்லா மக்களும் எப்படி உடுப்பது உறங்குவது உழைப்பது என்பதை அவர்களாகதானே தீர்மானிக்கிறார்கள். ஆட்சியை கூட எல்லா மக்களும் சேர்ந்துதானே தீர் மானிக்கிறார்கள் ??? இதல்லாம் அல்லது எதை சுயமா நிர்னயிக்க விட வேண்டும்????

    Reply : 0       0

    KD Sunday, 25 March 2012 12:48 AM

    முகமட்,
    சுயநிர்ணய உரிமை என்பது என்ன என்று தெரியாவிட்டால் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு இனத்தினுடைய தனித்துவத்தில் தலையிடுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

    Reply : 0       0

    sarithan Sunday, 25 March 2012 01:14 AM

    நல்லா சொன்னீங்க கே. டி.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 25 March 2012 02:30 AM

    கே டி எனக்கு நீங்க என்ன என்று எண்ணி இருக்கிறிங்க என்று தெரியாதே கொஞ்சம் விவரமா எழுதகூடாதா???

    Reply : 0       0

    KD Sunday, 25 March 2012 04:00 AM

    முகமட் ,
    தமிழ் இனம் சுயநிர்ணய உரிமையயை பெற்றுக் கொள்வதற்காக இன்னமும் போராடிக் கொண்டு தான் இருக்கிறது.

    Reply : 0       0

    reka Sunday, 25 March 2012 04:01 AM

    மொகமட்! இவர்களுடைய சுயநிர்ணயம் உங்களுக்குப் புரியாது. இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பகடைக்காய்களாக்கி எல்லோரும் அரசியல் செய்கிறாங்கள்.
    இந்தியா 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தாறதாக சொல்லி 3 வருடங்களைக் கடத்தி ஜெனீவாவில் இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று வாக்குப் போட்டிருக்கிறது.

    எப்படியோ இலங்கையை ஒரு கை பார்ப்பது என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியாவும் உடந்தையாகிவிட்டது. தமிழருக்கான அரசியல் தீர்வை இழுத்தடித்த இலங்கை அரசாங்கமும் எங்கள் தலையில் மண் அளளிப் போட்டிருக்கிறது. சாதாரண மக்கள்தான் அனுபவிக்க வேண்டும

    Reply : 0       0

    Nishat Sunday, 25 March 2012 11:10 AM

    சுயநிர்ணய உரிமை என்றால் என்ன - இலங்கையை அன்னியனுக்கு தாரைவார்ப்பது.

    Reply : 0       0

    ummpa Sunday, 25 March 2012 02:08 PM

    இருபக்கமும் கொலை நடக்கும்போது தடுக்கமுடியவில்லை! உங்களுக்கு முன் பல சம்பவங்கள் நடந்தேறியது அதனை தடுப்பதக்கு உங்கள் பரிவாரங்கள் முன்னின்று தடுத்து இருக்கலாம். மற்றும் சமாதான முயற்சிகளில் பலமான பலத்தை பிரயோகித்து இருந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இன்று ஹிந்துக்கள் ஹிந்துவாக இருந்து இருப்பார்கள்.

    Reply : 0       0

    குமார் Sunday, 25 March 2012 05:25 PM

    இவ்வளவு காலமும் கேட்க நாதியற்ற நிலையில் இருந்த தமிழர்களுக்கு அமெரிக்காவின் கரிசனை ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .