2025 மே 17, சனிக்கிழமை

தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் காதலியை சந்திக்க வந்தபோது கைது

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ், ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு துவிச்சக்கர வண்டிகளையும் இரண்டு தங்கத் தாலிகளையும் திருடிய சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் இன்று திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தனது காதலியை இன்று திங்கட்கிழமை, சந்திக்க வந்தவேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர் மீது பல திருட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொதுமக்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் நாளை யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி எஸ்.குணசிங்க மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .