2025 மே 17, சனிக்கிழமை

யாழ். நீதிபதியை அச்சுறுத்திய வழக்கில் ஈ.பி.டி.பி உறுப்பினர் இருவர் விடுதலை

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரியில் கடந்த 2010ஆம் ஆண்டு பாடசாலை மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணையை மேற்கொண்ட முன்னாள் சாவகச்சேரி நீதிபதி மா.கணேசராசாவின் யாழ் வாசஸ்தலத்தைச் சுற்றி ஆயுதத்துடன் நடமாடினர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகர சபை பிரதி முதல்வராக இருந்த துரைராஜா இளங்கோ (றீகன்), ஈ.பி.டி.பி.யின் தென்மராட்சி அமைப்பாளரும் சாவகச்சேரி நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான சூசைமுத்து அலெக்ஸ்சாண்டர் (சார்ள்ஸ்) இன்று செவ்வாய்கிழமை யாழ் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

நீதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர் என்ற சந்தேகத்தில் சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த வழக்கு தொடரப்பட்டு வந்தது.

யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தனது தீர்ப்பில் ஒரு மொட்டைக் கடிதத்தின் அடிப்படையில் எந்தவித ஆதாரங்களுமற்ற இந்த விசாரணை சட்டப்படி தவறென்றும், இருவரையும் உடனடியாக இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்வதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .