2025 மே 17, சனிக்கிழமை

யாழில் சட்டவிரோத கருக்கலைப்பு; பெண் கைது; மருத்துவருக்கு பொலிஸார் வலைவீச்சு

Menaka Mookandi   / 2012 மார்ச் 27 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கருக்கலைப்புக்கு உதவியதாகக் கூறப்படும் மருத்துவரைத் தேடி பொலிஸார் வலை வீசி வரகின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவருக்கு 50,000 ரூபா இரண்டு ஆள்பிணையில் செல்லுமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பு செய்யப்பட்ட போலி மருத்துவனையையும் அது இயங்கிய இடத்தையும், மருத்துவரையும் பொலிஸாருக்கு அடையாளம் காட்டுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த பெண் கடந்த மார்ச் 22ஆம் திகதி சட்டவிரோதமாக இயங்கிய கருக்கலைப்பு நிலையத்தில் கருக்கலைப்பு செய்து இரத்தப்போக்கு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்துள்ளார.;

உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .