2025 மே 17, சனிக்கிழமை

குடும்ப பிரச்சினைகளால் யாழ். பொலிஸில் முறைப்பாடுகள் அதிகரிப்பு - சமன் சிகேரா

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

குடும்பப் பிரச்சினைகள் காரணமாக தினமும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'யாழில் குடும்பத்தகராறு காரணமாக பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தினமும் காணித்தகராறு மற்றும் உறவினர்களுக்கிடையே குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பாக இரு தரப்பினரையும் பேசித் தீர்க்கக் கூடிய விடையங்கள் பேசித்தீர்த்து வைக்கப்பட்டள்ளதாகவும் தீர்க முடியாத பிரச்சனைகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைக்காக வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார்.

குடும்பங்களுக்கிடையிலான பிரச்சினைகள் தொடர்பாக குடும்ப ஆலோசகரை அணுகுவதற்குரிய வழிவகைகளையும் பொலிஸார் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .