2025 மே 17, சனிக்கிழமை

பாலியல் குற்றச்சாட்டில் கைதான நபருக்கு மீண்டும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு எதிர்வரும் 30ஆம் திகதிவரை மீண்டும்  விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

இரு வாரகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இச்சந்தேக நபர் மீதான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராச இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றசாட்டில் இச்சந்தேக நபர்; கோப்பாய் பொலிஸாரினால கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் சட்டத்தரணிகளான எஸ்.சுகாஸ் மற்றும் மணிவண்ணன் ஆஜராகினர்

சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, மு.றெமிடியஸ், சர்மினி விக்னேஸ்வரன் சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றத்தில்  மீண்டும் விண்ணப்பித்து கோரிக்கை விடுத்தனர்;.

சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும் பொலிஸ் விசாரணை முடியும்வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் யாழ். நீதிமன்ற நீதிபதி பணித்தார்.

You May Also Like

  Comments - 0

  • shanthi Thursday, 29 March 2012 04:32 PM

    very good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .