2025 மே 17, சனிக்கிழமை

புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு வாகனங்களை கொள்வனவுசெய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் விடுதலை

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

தழிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்து கொடுத்தார் என பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர், இன்று புதன்கிழமை யாழ்.மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 08.07.2009 ஆண்டு குருநாகல் மாவட்டத்தைச் சேந்த மாரிமுத்து பாண்டியன் (வயது 60) என்ற நபர் பாயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் குருநாகலில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர் மீது தழிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பரிவினரான பொட்டம்மான், குட்டி, இனியவன் ஆகியோரின் பாவனைக்காக அதிநவீன சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பிரகாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வந்தது.

இன்றைய தினம் இந்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டதும் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் நான்கு பேர் சாட்சிகளாக நிறுத்தப்பட்டனர்.

நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும் நிரூபிப்பதற்கான போதிய ஆராதங்கள் இல்லாமை மற்றும் வேறு ஆதாரங்கள் இல்லாமையினால் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சந்தேக நபர் சார்பாக பிரபல சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஆஜராகியிருந்தார். சந்தேக நபருக்கு எதிராக அரச சட்டத்தரணி எஸ். திருக்குமரன் மன்றில் ஆஜராகியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .