2025 மே 17, சனிக்கிழமை

கொள்ளையரின் தாக்குதலில் யாழ். மாநகர சபை ஊழியர் படுகாயம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கொள்ளையர் குழுவின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்து சுயநினைவை இழந்த நிலையில் யாழ்.மாநகர சபை ஊழியர் ஒருவர் இன்று புதன்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று செவ்வாய் கிழமை இரவு 8 மணியளவில் ஏ - 9 பாதை வழியால் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த நபரை வழிமறித்த கொள்ளையர் குழு, இவரிடமிருந்த 5 பவுண் தங்க மோதிரத்தையும் 2 பவுண் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்து அவரைத் தாக்கிக் காயப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொள்ளையரின் தாக்குதலுக்கு இலக்கான யாழ். திருநகர் இராஜசிங்கம் வீதியைச் சேர்ந்த நபரான மூஞ்சி சின்னையா (வயது 52) என்பவரே படுகாயமடைந்த நிலையில் சுயநினைவை இழந்துள்ளதாக யாழ். பொலிஸ் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .