2025 மே 17, சனிக்கிழமை

வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு எதிராக இழப்பீடு கோரி முறைப்பாடு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதிகளவில் பொதுமக்கள் இழப்பீடு கோரி முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வீதி அகலிப்பு பணிகளின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தங்களது காணிகளைச் சுவீகரித்தமை, அபகரிக்கப்பட்ட காணிக்கான இழப்பீடுகளை இதுவரை செலுத்தாமை, பயன்தரும் மரங்களான தென்னை மரங்களை அனுமதியின்றித் தறித்தமை தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பலாலி, யாழ்ப்பாணத்தின் பிரதான போக்குவரத்துப் பாதையான ஏ - 9 வீதி, மிருசுவில் பகுதி ஆகியவற்றில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான சரியான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக மேலும் ஆராய வேண்டியுள்ளது   அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .