2025 மே 17, சனிக்கிழமை

பகிடிவதையால் யாழ். பல்கலைக்கழக மாணவன் வைத்தியாசாலையில் அனுமதி

Super User   / 2012 மார்ச் 29 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட முதலாம் வருட கலை பீட மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்திற்குள் வைத்து குறித்த மாணவனை சிரேஸ்ட மாணவர்கள் பலர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக கலை பீடத்தின் முதலாம் வருட மாணவனான தில்லைநாதன் தனராஜ் (வயது – 22) என்ற மாணவனே படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதையின் காரணமாக குறித்த மாணவனின் காதின் செவிப்பறை உடைக்கப்பட்டுள்ளதுடன் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • neethan Friday, 30 March 2012 02:31 AM

    ஆயுத பலம், பகிடி வதைக்கு ஆப்பு செலுத்திய காலம் முடிவுக்குவர,அரக்கர்களாக செயல்பட முனைந்துள்ளனரா?

    Reply : 0       0

    hrish Friday, 30 March 2012 04:13 AM

    சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .