2025 மே 17, சனிக்கிழமை

யாழில் வைத்திய சுகாதார சேவைக்கான ஆளணி பற்றக்குறை அதிகரிப்பு: ஆ.கேதீஸ்வரன்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தின் வைத்திய சுகாதார சேவைக்கான ஆளணிப்பற்றாக் குறைகள் அதிகரித்துச் செல்வதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 110 வைத்தியர்கள் தேவையாக உள்ளதாகவும் அவர்களில் 60 வைத்தியர்களே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், 28 வைத்திய நிபுணர்களில் 6பேர் மட்டும் இருப்பதாகவும் தொழிநுட்ட உத்தியோகத்தர்கள் அதிகளவில் தேவைப்படுவதாகவும் கூறினார்.

இதேவேளை தாதியர் உத்தியோகத்தர்கள் 200க்கு மேற்பட்டோர் யாழ்.வைத்தியசாலைகளுக்கு தேவையாக உள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டால் யாழ்.மக்களுக்கு போதியவளான சுகாதார சேவைகளை வழங்கமுடியும் என்றும் கூறினார்.

யாழ்.மாவட்டத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட 34 வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை கிராமிய வைத்தியசாலைகளை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

யாழ்.சாவகச்சேரியில் உள்ள வைத்தியசாலையில் புதிதாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கியிருந்து வைத்திய சேவையைப் பெறுவதற்கான முதியோர் விடுதிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .