2025 மே 17, சனிக்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

Super User   / 2012 மார்ச் 30 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                          
                                                                                  (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில்  ஹெரோயின்  போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிமன்ற நீதிவான் மா. கணேசராச உத்தரவிட்டுள்ளார்

யாழ்.கொட்டடிப் பகுதியில் ஹொரோயின் போதைப் பொருட்களைத் தன் வசம் வைத்திருந்தனர் என யாழ். பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூவர் இன்று யாழ் .நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்

அவர்கள் மூவரையும் தொடர்ந்து விளக்கமறியில் வைத்து விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் இவர்களிடம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஹெரோயின் போதைப் பொருளை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி நீதிமன்றிக்கு அறிக்கை சமர்பிக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .