2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிடைத்த சந்தர்ப்பங்களை இழந்து விட்டு முள்ளிவாய்க்காலில் நின்று அழுகின்றோம்: மாவை சேனாதிராஜா

Super User   / 2012 மார்ச் 31 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                               
                                                                                        (கவிசுகி)

'தமிழ் மக்களுக்கு கிடைத்த எவ்வளவோ சந்தர்ப்பங்களை நாம் இழந்து விட்டோம் அதனால் தான் இன்று முள்ளிவாய்க்காலில் நின்று அழுகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார்.

தந்தை செல்வாவின் 114 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நாவலர் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா இவ்வாறு கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய இனத்துக்கு உரித்தான இறைமையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்று எமக்கே உரித்தான ஆட்சியைப் பெறுவதற்காக நாம் இன்றும் போராடி வருகின்றோம்.

எமது உரிமையை யாரும் பறித்துவிட முடியாது, எமது பிறப்புரிமையை நாம் ஒருபோதும் இழக்கமாட்டோம். தமிழ் இனத்திற்கான விடிவுக்காக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடியதான அரசியல் தீர்வை பெறுவதற்காக நாம் அரசுடன் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்

ஜெனீவா தீர்மானத்தின் எடுக்கப்பட்ட முடிவுகள் தமிழ் தேசிய இனத்துக்கு கிடைத்த ஆறுதலான மகிழ்ச்சி. அமெரிக்காவின் இராஜதந்திரத்தில் இலங்கை அரசை சிக்கவைத்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்' என்றார்

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையில்,

'ஆயுதப் போராட்டத்தில் நாம் கொடுத்த விலைக்கு இன்றுதான் ஆறுதலான தீர்வு கிடைத்துள்ளது. உலகம் இலங்கை அரசைப்பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளது

சாத்வீகப் போராட்டத்திலும் ஆயுதப் போராட்டத்திலும் 3 இலட்சத்திற்கு அதிகமான மக்களை நாம் இழந்து இருக்கின்றோம் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளை இழந்து இருக்கின்றோம் அதன் பின்னர்தான் உலகம் எம்மைத் திரும்பிப் பார்கிறது.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பான நாங்கள் தீர்க்கதரிசனத்துடனும், இராஜதந்திர நகர்வுகளை சரியான முறையில் புலம்பெயந்த மக்களுடன் இணைந்து செயற்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உறுதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும். தமிழ் மக்கள் எமக்கு தந்த ஆணையைப் பின்பற்றி தமிழ் மக்கள் எதை எதிர்பார்கிறார்களோ அதைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் பின்னிற்க மாட்டோம்

சர்வதேச நிலமைகள் தற்போது மாறிவருகிறது இந்த மாறிய நிலைமைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வென்றெடுக்க அனைவரும் உழைக்க வேண்டும்' என்றார்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள் எல்லோரும் இந்த மேடையில் ஒன்றிணைந்துள்ளோம். இது தமிழர்களின் விடிவுக்கான அறிகுறி. இனி நாம் பிரிந்து வாழ முடியாது நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது.
'எங்கட இனத்தை சிங்கள இனம் மதிக்கும் வரைக்கும் நான் சிங்கக் கொடியை எனது கையால் ஏற்றியது கிடையாது'

வன்னியில் மக்கள் யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் அரை வயிற்றுடனே வாழ்கின்றார்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாதவர்களாக இருக்கின்றார்கள்' என்றார்

'புளொட்' தலைவர் தர்மலிங்கம் சித்தாத்தன் உரையாற்றுகையில்,

'தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. எமது விடுதலையைப் பெற்று எடுப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்று பட வேண்டும். தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்கான ஜனநாயகப் போரில் தற்போது நின்று கொண்டு இருக்கின்றோம் அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுகையில்,

'அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது சர்வதேச அரங்கில் ராஜதந்திரப் போராட்டமாக வடிவம் எடுத்துள்ளது. ஜெகிவா தீர்மானத்தை நாங்கள் சரியாகப் பயன்படத்த வேண்டும்

எங்களின் உரிமைப் போரில் தொடக்கப் புள்ளியில் நிற்கின்றோம். தழிழர்களின் உரிமைக்கான தீர்வை விரைந்து அரசு விரைந்து அமுல்படுத்த வேண்டிய கட்டயத்தில் இலங்கை அரசு இருக்கிறது. சர்வதேசம் இலங்கையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது' என்றார்.








You May Also Like

  Comments - 0

  • sivanathan Sunday, 01 April 2012 03:55 AM

    மீண்டும் பிளவு பட்ட அறிக்கைகளை எப்போது விடுவார்ளோ. நான் தான் பெரிசு நான் தான்பெரிசு என்ற எண்ணம் இவர்களிடம் இருந்து விலகட்டும். இழப்புக்களை இனியும் தாங்கிகொள்ள முடியாது. நல்லதாக நினைப்போம்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 01 April 2012 04:12 AM

    இனியாவது எந்த வாய்பை சரியாக பயன்படுத்த போகிறீர்கள் என்பதைதான் அப்பாவி தமிழ் சனங்கள் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

    Reply : 0       0

    P.Sabeshan Sunday, 01 April 2012 04:15 AM

    Karuththukkalai velippaduthum kaalam thamil thalaivarkalukku kidaiththirukku. veluthukaddungal.

    Reply : 0       0

    neethan Sunday, 01 April 2012 05:21 AM

    இழந்த உயிர்களும் அழிந்த சொத்துகளும் போதும், கருத்தொற்றுமை, இணக்கப்பாடு,சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நசுக்கப்படும் மற்ற சிறுபான்மை இனத்தையும் அரவணைத்து அரசியல் தீர்வுக்காக முழு வீச்சுடன் செயல்படுங்கள்.

    Reply : 0       0

    nal pushpa vanni pushpa Monday, 02 April 2012 11:12 AM

    தமிழ் தலைவர்களின் இந்த ஒற்றுமை நிலைக்க வேண்டும். எமக்குரிய உரிமை கிடைக்கும்வரை உள சுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .