2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தனியார் மருந்தகத்தில் அரச வைத்தியசாலைக்குரிய மருந்துகள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். ஆரியகுளம் பகுதியில் உள்ள  தனியார் மருந்தகம் ஒன்றில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தபோது நேற்று திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திடீர் பரிசோதனைக் குழுவைச் சேர்ந்த பிராந்திய தொற்று நோயியலாளர் சு.சிவகணேஸ், பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர் பொ.சிவரூபன், மருந்தாளர் எஸ்.விக்கினேஸ்வரன் ஆகியோர் மேற்கொண்ட பரிசோதனையின்போது அரசாங்க இலச்சினை பொறிக்கப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்பிட்ட தனியார் மருந்தக உரிமையாளருக்கு எதிராக பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .