2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருடன் யாழ். அரச அதிபர் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எஸ்.கே. பிரசாத்)


யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித்; திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக யாழ்.அரச அதிபர்; இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இச்சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்,

மீள்குடியேற்ற நடவடிக்கை, அபிருத்தி, சுகாதாரம் மிதிவெடியகற்றல் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் குறித்து அறிக்கையை ஒவ்வொறு மாதமும் பிரித்தானிய தூதரகம் ஊடாக தமக்கு அனுப்பி வைக்குமாறும், இவ்வாறு அனுப்பி வைக்கும் போது பிரித்தானியாவில் வாழுகின்ற மக்களின் ஊடாக இங்குள்ள தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன்; போரினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விதவைகளின் வாழ்வதார அபிவிருத்தி, வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினை, வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துக்கூறியதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .