2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திடீர் மின் அதிகரிப்பினால் பாவனையாளர்கள் பாதிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வலிகாமம் பகுதியில் உள்ள சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, மருதனார்மடம், உடுவில் பகுதிகளில் அடிக்கடி நிகழும் திடீர் மின் அதிகரிப்பினால் தொடர்ச்சியாக மின்சார உபகணங்கள் எரிவதுடன் பழுதடைந்தும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருதனார்மடம் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இரண்டு பம்பிகள் எரிந்துள்ளதுடன் அயலிலுள்ள வீடுகள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் காணப்பட்ட மின் உபகரணங்களும் பழுதடைந்துள்ளன.

இதேபோன்று, கடந்த வாரம், தெல்லிப்பளை, அளவெட்டி மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளிலும் இத்தகைய சம்பவம் இடம்பெற்றதுடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் மக்களின் பெருமளவான இலத்திரனியல் மின் உபகரணங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார சபையிடம் முறையிட்டும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .