2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களை விடுவிக்க கோரி இந்திய தூதுவராலயத்தில் மகஜர் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 30ஆம் திகதி இந்திய கடலில் கரையொதுங்கிய பருத்தித்துறை மீனவர்கள் இருவரை விடுதலை செய்யுமாறு கோரி அவர்களது உறவினர்கள் இன்று செவ்வாய்கிழமை யாழ்.இந்தியத் தூதுவரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

பிளாஸ்ரிக் படகில் கடற்றொழிலுக்கு சென்ற தந்தையும் மகனுமான கடற்றொழிலாளர் இருவரை இந்தியக் கடற்கரை பாதுகாப்பு படையினர் கைது செய்து தமிழ் நாடு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பில் அக்கறை எடுத்துச் செயற்படுமாறும் உடனடியாக விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .