2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மிதிவெடி அபாயம் பற்றிய விழிப்புணர்வும் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நிகழ்வும்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 04 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கவிசுகி, எஸ்.கே.பிரசாத்)


மிதிவெடி அபாயம் பற்றிய விழிப்புனர்வும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சர்வதேச தின நிகழ்வும் இன்று புதன்கிழமை காலை யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திருமதி கமலா சிவசிதம்பரம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

அங்கு உரையாற்றிய அவர், 'இந்த நிறுவனம் இல்லாதிருந்தால் நிறையபேர் தங்கள் மனத்திடத்தை இழந்திருப்பார்கள். இந்த நிறுவனம் தான் வலுவிழந்தவர்களுக்கு மனத் தைரியத்தையும் உச்சாகத்தையும் கொடுக்கிறது.

வலுவிழந்தவர்களை சமூகத்தோடு ஒன்றிணைத்து வாழவேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு' என்றார். இந்த நிகழ்வின் போது பயனாளிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .