2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நட்டத்தில் இயங்கும் யாழ். மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாவட்ட கூட்டறவுச் சங்கங்கள் நட்டத்திலேயே இயங்கி வருவதாக யாழ். கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் த.அருந்தவபாதன் தெரிவித்தார்.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை யாழ்.மாவட்ட கூட்டுறவு முகாமைகளர்களுகிடையே நடைபெற்ற முக்கிய வருடாந்த ஆண்டு அறிக்கை கூட்டத்தில் அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறைகளோடு ஒப்பிடுகையில் கூட்டுறவுத் துறை பின்நோக்கிச் செல்வதாகவும் அவற்றை நிர்வகிக்கக் கூடியவர்களின் அக்கறையீனமே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டுறவுத்துறையை முன்னோக்கிய அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு அனைத்து கூட்டுறவாளர்களும் அர்பணிப்போடு சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி கூட்டுறவாளர்களின் கைகளிலேயே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் மக்களுக்கு சேவை செய்வதற்காக அப்பணிப்புடன் கூடிய சேவை தேவையாகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறையினரிடம் ஆளணிகள் இருக்கிறது தேவையான இயந்திர வளங்கள் இருக்கின்றன. இருந்தும் யாழ்.மாவட்ட கூட்டுறவுத்துறை பாரிய வளர்ச்சியடையவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .